அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் ஒன்லைன் விற்பனைக்காக குளிர்பான போத்தல்களின் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது.
அநுராதபுரம், மரதன்கடவல மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்லைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒரு தொகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகயின் அடிப்படையில் குறித்த நபரிடமிருந்து 5.25 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
அத்துடன், சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் மற்றும் குளிர்பான போத்தல்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கைது செய்யப்பட்ட நபர் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com