ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெற்றது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 09 டிபெண்டர் ரக ஜீப்கள் உள்ளடங்களாக 15 வாகனங்கள் ஏலமிடப்பட்டிருந்ததுடன், மிகுதி வாகனங்களும் விரைவில் ஏலமிடப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் இல்லை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதியினால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக்குழுவினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாகும்.
இந்த வாகனங்ளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான கேள்வி காணப்பட்டதுடன் ஏலத்தின் போது 199 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.