இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டபோதும், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என கண்டறியப்பட்டுள்ளது.
அதே விண்கல் சந்திரனைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா இப்போது குறிப்பிட்டுள்ளது.
சுமார் பத்து வான் பொருட்கள் பூமியை நெருங்கி வருவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சில விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு எரிந்திருக்கலாம் எனவும், அவை அனைத்தும் மனிதர்களின் கண்ணில் தென்படாமலேயே நடந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com