பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில் இணைந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மனித நாகரிகம் ஆரம்பமான நாளிலிருந்தே உலகம் முழுவதும் ஒவ்வொரு மனித சமூகமும் தமக்கான தனித்துவம்மிக்க கலாசார பெறுமதிகளைக் கொண்டு தமது அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளதை மனித வரலாற்றை உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், பெரஹெர என்பது மதத்தின் பெறுமை போன்று அழகியல் சார்ந்த பெறுமதிகளின் ஒன்றிப்பாகும் என கூறிய பிரதமர், பெரஹெர ஊர்வலம் முழுவதும் எமக்குரியவை என்ற உணர்வு அனைவர் மத்தியிலும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோன்று, பெரஹெர என்பது தனித்தனியான நபர்களுக்காக கூட்டு மனித செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு கலாசார சந்தர்ப்பம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், தனித்தனியான மனித தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பதிலாக கூட்டு மனித செயற்பாடுகளே நாடு என்ற அடிப்படையில் நமக்கு தற்போது தேவைப்படுவது எனவும் பிரதமர் கூறினார்.
படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ள நாட்டை மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே இன்று அரசாங்கத்திற்குள்ள சவால் என கூட்டிக்காட்டிய பிரதமர், குறித்த மறுமலர்ச்சி நாட்டிற்கு பொருளாதார மறுமலர்ச்சியைப் போன்று கலாசார மறுமலர்ச்சியும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.





Link: https://namathulk.com