யானை – மனித மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது .
இரவு நேர ரயில் போக்குவரத்தின் போது யானைகள் மோதுண்டு இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
அதன் ஒரு கட்டமாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ரயிலின் போக்குவரத்து நேரத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இரவு 07 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் மீனாகயா ரயில் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் சற்று தாமதமாகி பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
இதனூடாக யானைகள் வழிமாறும் இடங்களை ரயில் அண்மிக்கும் நேரம் மாறுபடும் என்பதால் பாதிப்புக்கள் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.
Link : https://namathulk.com