நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
இது தொடர்பாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 21 முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால், சங்கத்தின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய, போதுமான கால அவகாசம் கிடைக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையால் பெரும் அசெகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய நாளைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com