நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சவால்விடுத்த துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவல்களை இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
27 வயதான குறித்த இளைஞன் 90 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த துப்பக்கிதாரியின் பல மர்மங்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
கம்பஹா கந்தானையில் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் குறித்த இளைஞன் தொடர்புடையவர் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனாராச்சி என்ற குறித்த சந்தேகநபர் 2024 டிசம்பர் 13 ஆம் திகதி கந்தானையில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டிலுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினால் இவர் வழிநடத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
Link : https://namathulk.com