கம்பஹா வத்தளையில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டதாக கூறினர்.
சந்தேகநபர் தொழிலதிபருடன் நெறுங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவரது நகைகளை கொள்ளையடிக்க இந்த கொலையை செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதன்படி, வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், இம்மாதம் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com