கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டு பணங்களோ வேட்டுபுமனுக்களே செலுத்தமுடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட பதில் அரசாங்க அதிபருமாகிய எஸ். முரளிதரன் கூறினார்.
பூநகரி பிரதேச சபை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதற்கான தேர்தல் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com