2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து யாராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.
நாட்டில் ஊடுருவிய ஒருசில தீவிர போக்குடைய சிந்தனைவாதிகளால் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடுபிடிக்கப்படவில்லை.
இந்த பின்புலத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.
பாதுகாப்புப் படையினர் இவ்விடயம் குறித்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செலவின தலைப்பு தொடர்பான விவாதங்களின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இவ்விடயம் தொடர்பாக உரையாற்றியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன் இருப்பதாகவும், நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com