சிறுபோக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயக் காணிகளுக்கான நீரை மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் திறந்துவிடுவது தொடர்பில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கூடியது.
இதன்போது, ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து நெல் வயல்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
அத்துடன், நெல் வயல் நிலங்கள் நிரப்பப்படும் பிரச்சினை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
மேலும், ‘பிடியளவு கம நிலத்திற்கு’ திட்டமானது தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கைக்கான திட்டம் அல்ல எனவும், அந்தந்தப் பிரதேசத்தில் விஞ்ஞான அடிப்படையில் பயிர்ச்செய்கை செய்யக் கூடிய பயிர்களை அடையாளம் கண்டு அந்தப் பிரதேசத்திற்கான விவசாய ஆணையாளரின் அனுமதியைப் பெற்று அந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் எனவும் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்தமேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் நீர்ப்பாசன கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவின் தலைவர் கூறினார்.
Link : https://namathulk.com/