சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத சிகரெட் அழிக்கும் முற்றத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன .
2024, 2022 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுங்கத்தால் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் இருப்பு சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
