வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்த போதும், 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை எனவும், கட்சி வழக்கில் உள்ளதாகவும் பாரளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com