வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டிற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சென்ற இளைஞர்களே மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com