பாராளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் ஆர்பாட்டம் நடாத்த திட்டமிட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொலிசாரின் கோரிக்கைகளுக்கமைவாக கொழும்பு பிரதம நீதவான் 05 பேருக்கு இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரியான சுதேஷ் ரூபசிங்க
- கூட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தம்மிக்க முனசிங்க
- கூட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமண்டா கமகே
- கூட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தினுஷா ஏகநாயக்க
- கூட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பூர்ணிமா நதீஷா
அதன்படி, பொல்துவ சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் வீதிகளை தடைகளை ஏற்படுத்தக்கூடாது எனவும், எந்தவொரு வன்முறைச் செயல்களிலும் ஈடுப்பட முடியாது என நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் அல்லது பொது அதிகாரிகளின் கடமைகளில் தலையிடும் வகையில் அவர்கள் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்தப்படுவதை போராட்டத்தில் ஈடுப்படும் நபர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தடையுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட போராட்டம் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com