இங்கிலாந்தில் தாய்மாருக்கு எமனாகிய சொந்தப்பிள்ளைகள்,170 தாய்மார்கள் இதுவரை  கொலை

Aarani Editor
1 Min Read
கொலை

இங்கிலாந்தில் 15 ஆண்டுகளில் 170 ற்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் மகன்களால் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் குறித்த விடயம் ஒரு அறியப்பட்ட பிரச்சினையாக மாறிவிட்டாலும் அதற்கான தீர்வு இன்னமும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

2024 ஆம் ஆண்டில் ஒரு ஆணால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு பெண்ணையும் ஆவணப்படுத்தியுள்ள தி கார்டியனின் தரவுகளின்படி தங்கள் மகன்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்களின் வழக்குகளில் குறைந்தது ஏழு வழக்குகளை அடையாளம் கண்டு குறிப்பிட்டுள்ளது.

ஒரு புதிய பெண் கொலை கணக்கெடுப்பு அறிக்கையானது கடந்த 15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 173 ஆக இருப்பதாக கூறுகிறது.

வீட்டுவசதி இல்லாதது, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை இந்தக் கொலைகள் பலவற்றின் பின்னணியில் உள்ள முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.

2009 மற்றும் 2023 க்கு இடையில் ஆண்களால் கொல்லப்பட்ட அனைத்து பெண்களில் 17வீதமானோர் தங்கள் மகன்களால் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களில் பெரும்பாலோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஐந்தில் ஒருவர் கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

25 முதல் 34 வயதுடையவர்கள் இன்னும் தங்கள் பெற்றோருடன் வாழும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக, நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தங்கள் மகன்களால் கிட்டத்தட்ட எந்த கவனமும் இல்லாமல் கொல்லப்பட்டுள்ள நிலையில், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறைகளுக்கு சரியான தீர்வு இன்னமும் கிடைக்காமலிருப்பது மிக மோசமான ஒரு நிலையாகப் பார்க்கப்படுகின்றது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *