கல்வித்துறை மாற்றத்திற்காக ‘கல்வி கவுன்சில்’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் மீகொடையில் அமைந்துள்ள கல்வி பீட தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மேலாண்மை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, கல்வித் துறையில் தொழில்முறை மற்றும் தரத்தை வளர்ப்பதுவே கல்வி கவுன்சிலை நிறுவுவதன் முதன்மை நோக்கம் எனவும் பிரதமர் கூறினார்.
அத்துடன், C.W.W கன்னங்கராவால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தத்தைப் போன்ற ஒரு புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு நாட்டின் கல்வியை எடுத்துச் செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுச்சேவை சார்ந்து எதிர்காலத்தில் தோன்றும் சம்பள முரண்பாடுகளை நீக்க செயலாற்றுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com