முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
பெற்றோர்களால் பாதுகாப்பு பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டதிலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Link: https://namathulk.com
