ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, “வலுவான தலைமையின்” கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனின் கீவ் நகருக்கு இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து நீண்ட சமூக ஊடக பதிவில் வெள்ளை மாளிகையின் மோதலை “வருந்தத்தக்கது” என்று உக்ரேனிய ஜனாதிபதி விவரித்துள்ளார்.
“போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம், முதல் கட்டங்கள் கைதிகளை விடுவிப்பது மற்றும் வானத்தில் போர் நிறுத்தம், பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தடையகற்றல் மற்றும் கடலில் உடனடியாக போர் நிறுத்தம்” போன்ற விடயங்களை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
“அடுத்த அனைத்து கட்டங்களிலும் மிக வேகமாக முன்னேறவும், ஒரு வலுவான இறுதி ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
“இது இப்படி நடந்தது வருந்தத்தக்கது. “விடயங்களைச் சரிசெய்ய வேண்டிய நேரம் இது. எதிர்கால ஒத்துழைப்பும் தகவல்தொடர்பும் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்பதை வலியுறுத்தியிருந்தார்.
மேலும் ஜெலென்ஸ்கி தனது பதிவில், தனது நாட்டிற்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com