எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அரபுத் தலைவர்களை ஒன்றிணைத்து அவசர உச்சி மாநாடு ஒன்று இடம்பெற்றது.
இதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் யோசனைக்கு போட்டியாக 53 பில்லியன் டொலர் புனரமைப்புத் திட்டத்திற்கு அரபு தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அரபு உலகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய “மத்திய கிழக்கு ரிவேரா” என்று பெயரிடப்பட்ட அமெரிக்க திட்டத்தை எதிர்கொள்ள எகிப்து சில ஆவணங்களைத் தயாரித்திருந்தது.
இலைகளுள்ள மரங்கள் நிறைந்த பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் பிரம்மாண்டமான பொது கட்டிடங்களின் படங்கள் உட்பட 91 பக்க பளபளப்பான ஆவணமாக இவ் வரைபடம் காணப்படுகிறது.
இந்த புதிய திட்டமானது, தனியே காஸாவின் சொத்துக்கள் பற்றியது மட்டுமல்லாமல் அதன் அரசியல் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் தொடர்பானவையாகவும் காணப்படுகின்றது.
கூட்டத்தின் முடிவில் “எகிப்து திட்டம் இப்போது ஒரு அரபு திட்டம்” என்று அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அஹ்மத் அபுல் கெய்ட் அறிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை நேரடியாகக் கூறாமல், “அரபு நிலைப்பாடு எந்தவொரு இடப்பெயர்வையும் நிராகரிப்பதாகும், அது தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ இருந்தாலும் சரி” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தேவையான பெரும் தொகையை திரட்ட அடுத்த மாதம் ஒரு பெரிய சர்வதேச மாநாடு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது நட்பு வட்டாரங்களால் இத் திட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறமை முக்கியமானது.
Link : https://namathulk.com