தபாலில் செல்கிறது O/L பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

Aarani Editor
1 Min Read
அனுமதி அட்டைகள்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரிட்சை அனுமதி அட்டைகளை தபால்மூலம் அனுப்பி வைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் சொந்த முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிட்சை அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதற்கான வசதியினை https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற 474,147 பரீட்சார்த்திகள் தகுதிபெற்றுள்ளனர்.

பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *