நுகர்வுக்கு பொருத்தமற்ற, தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் கிடைப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட சந்தை கண்காணிப்பு ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், உள்ளூர் உற்பத்தியாளர்களால் தங்களின் உற்பத்தி பொருளுக்கான தரம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் தரமற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சில உற்பத்தியாளர்கள் உற்பத்தி செலவுகளைக் குறைத்து அதிக இலாபத்தைப் பெறும் நோக்கில் வேண்டுமென்றே தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்குவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இது நாட்டில் நடைபெறும் மற்றொரு வகையான மோசடி எனவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படும் நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com