திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அகழ்வுப் பணி ஆரம்பமாகியுள்ளது .
குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்
திருகோணமலை குற்ற விசாரணை, புலனாய்வு பணியக பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் , ஆயுதக் கிடங்கை தோண்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இடம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com