2025இன் சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு இப் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.
இவ் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.
குழு ஏ பிரிவின் போட்டிகளில் நியூசிலாந்து அணி இரண்டில் தோல்வியடைந்துள்ளது, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
குழு பி பிரிவில், தென்னாப்பிரிக்கா அணியானது இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை மழையால் இழந்தது.
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறப்போகும் அணி எது என்பது தொடர்பிலான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
Link : https://namathulk.com