அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையோரப் பிரதேசமானது ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தெற்கு நோக்கிய சூறாவளியின் தாக்கத்திற்கு உட்பட்டு வருகின்றது.
தற்போது ஏற்படப்போகும் சூறாவளித் தாக்கத்திற்காக மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர்.
வகை ஒன்று – அட்லாண்டிக் சூறாவளியின் வலிமைக்கு சமமான இந்த ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளியானது 2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் குயின்ஸ்லாந்தின் பிரிஸ்பேன் நகருக்குத் தெற்கே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை நிலவரப்படி, ஆல்பிரட் சூறாவளி கடற்கரையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகமான காற்றுடன் மேற்கு நோக்கி நகர்கிறது என்று அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன் முழுவதும் 20,000 சொத்துக்கள் பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், குயின்ஸ்லாந்து பிரதமர் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்ற, உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் தாக்கம் தற்போதுவரை நிவர்த்திசெய்ய முடியாததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com