இரத்தினபுரி, பெல்மடுல்ல பகுதியில் போலி இலக்க தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களை வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் பொலிசாரால் கைபற்றப்பட்டன.
குறித்த வாகனங்கள் வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள், பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Link : https://namathulk.com