வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரை விநியோகம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டுக்குள் போதைமாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களும் திடீர் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com