நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று வளியின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரிசோதனை நம்பிக்கை நிதியம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இன்று வளியின் தரம் 52 – 100க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் வளியின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com