வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) தயாராக இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என கூறினார்.
இந்நிலையில் பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் தங்களை தொடர்பு கொள்வதாகவும் , அது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டும் வருவதாகவும் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com