பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பாதுகாப்பு மையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு தாக்குதல்தாரிகள் வெடிபொருட்கள் நிறைந்த இரண்டு வாகனங்களை பன்னுவில் உள்ள வளாகத்தின் சுவரில் மோதினர்.
ஏனைய தாக்குதல்தாரிகள் விரட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும், கொல்லப்பட்டவர்களில் குறைந்தது ஏழு குழந்தைகளும் அடங்குவதாக மருத்துவமனை பட்டியல் சுட்டிக் காட்டுகிறது.
ரமழான் நோன்பு தொடங்கிய பின்னர் பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தாக்குதலான இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-ஃபுர்சன் பொறுப்பேற்றுள்ளது.
Link : https://namathulk.com