CCTV கெமராக்கள் இல்லாத பஸ்களுக்கு வழித்தட அனுமதி இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
தனியார் பஸ்களில் CCTV பாதுகாப்பு கெமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மாத்திரமே அவற்றுக்கான வழித்தட அனுமதி வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தேவை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
அத்துடன், பொதுப் போக்குவரத்தை பெண்களுக்கான பொது இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மேலும், பொது போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கான திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com