E-8 விசா பிரிவின் கீழ் நியாமான முறையில் தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்புவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தத் துறை ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு பலர் தங்கள் முறைப்பாடுகள் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க ஒரு தளத்தைக் கோரியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
அதற்கமைய பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைக்க நேரடி தளமொன்று உருவாக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உரிமங்கள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட இந்தத் துறையில் பல்வேறு முறைகேடுகளும் இடம்பெறுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக பொறுப்பான நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்கும் சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.