அம்பாறை, பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றதாக பொலிசார் கூறினர்.
இதன்போது, 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com