இந்த ஆண்டில், இதுவரை இடம்பெற்ற குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13, டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டில், இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த ஊடக பேச்சாளர், அவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக ஏற்பட்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் கூறினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் ஊடக பேச்சாளர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com