இஸ்ரேலுக்கும் காஸாவிற்குமிடையான போர் நடவடிக்கைகளில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை இஸ்ரேல் தடுத்ததைத் தொடர்ந்து, காஸாவின் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காஸாவில் உள்ள உணவு பொட்டலங்களின் இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று ஐ. நா. வின் மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காசாவில் உணவு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன,
“முற்றுகை தொடர்ந்தால், குறைந்தது 80 சமூக சமையலறைகளில் விரைவில் கையிருப்பு தீர்ந்துவிடும். மீதமுள்ள உணவு பொட்டலங்கள் 500,000 மக்களுக்கு மட்டுமே போதுமானதாயிருக்கும்” என்று OCHA தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த புதன்கிழமை காஸாவிற்கான உதவிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பான ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்
“மனிதாபிமான உதவி ஒருபோதும் போர்நிறுத்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது அல்லது ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது. இஸ்ரேல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதைப் போல காசாவுக்குள் நுழையும் பொருட்கள் மற்றும் விநியோகங்களை நிறுத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயத்தை ஏற்படுத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com