கண்டி- கொழும்பு வீதியில் போலியான இலக்க தகடு மற்றும் போலி ஆவணங்களுடன் கூடிய காரை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெவெல்தெனியா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகனம் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது போலியான இலக்க தகட்டைப் பயன்படுத்துவதையும், போலியான வருமான வரிப்பத்திரம், காப்புறுதி பத்திரம் ஆகியவற்றுடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் காலவதியாகியுள்ளதாக பொலிசார் கூறினர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com