கனடாவிற்கும் அமெரிக்காவிற்குமான வர்த்தகக் கொள்கைத் திட்டங்கள் முரண்பாடாக இருக்கின்ற சூழ்நிலையில், சில சமீபத்திய புகைப்படங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.
ஒன்டாரியோவிலுள்ள பர்லிங்டன் நகரில் மெர்வின் செக்வேரா எனும் புகைப்படக் கலைஞரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு அதிகம் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.
புகைப்படக் கலைஞரான மெர்வின் செக்வேரா, சமீபத்தில் காலையில் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றபோது, ஒரு வழுக்கைக் கழுகு உறைந்த ஏரியை நோக்கி இறங்குவதைக் கண்டார்.
இரையை குறிவைத்து இறங்கும் கழுகின் பார்வையில் தரையில் கனடா வாத்து ஒன்று தென்படுவதைக் கண்டார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படக்கருவியில் இரண்டுக்கும் இடையான போர் நிலைமைகளைப் புகைப்படமெடுத்துள்ளார்.
கழுகுகள் அனைத்தையும் உணவாக எடுத்துக்கொள்ளும் என இருந்தாலும் இவ்வகையான பெரிய வாத்துக்களை இரையாக்க போராடுவதை இப்போதுதான் தான் பார்ப்பதாகக் குறித்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவிலிருந்து, கனடாவின் இறையாண்மையானது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலைமையில், குறித்த நாடுகளுடன் நெருக்கமாக தொடர்புடைய இரண்டு பறவைகளுக்கு இடையிலான போர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களின் சமீபத்திய அடையாளமாக உருவெடுத்துள்ளது.
Link : https://namathulk.com