ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் குறித்த குழந்தை சென்று கொண்டிருந்தபோது சட்டவிரோதமாக இடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியுள்ளது.
இதன்போது தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்க்கும் மின்சாரம் தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்
சம்பவத்தில், 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
Link : https://namathulk.com