ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஐடிபி 2025 இல் இலங்கையின் சிகிரியாவிற்கு பசுமை இலக்கு வெண்கல விருது வழங்கப்பட்டது.
இயற்கை பாதுகாப்பு, பாரம்பரிய பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, எரிசக்தி திறன் மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகியவற்றில் சிகிரியாவின் சிறப்பை எடுத்துக்காட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது நிலையான சுற்றுலாத்துறைக்கான உறுதிப்பாட்டிற்கு சான்றாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐடிபி பெர்லின் மாநாடு, 2025 மார்ச் 4 முதல் 6 வரை பெர்லின் கண்காட்சி மைதானத்தில் நடைபெற்றது.
Link : https://namathulk.com