கனடா மற்றும் மெக்சிகோ மீதான, 25% வரிகளிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள சுதந்திர வர்த்தக விதிகளுக்கு இணங்கினால், வாகன உற்பத்தியாளர்களுக்கு 25% வரி விலக்கு அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, ஜெனரல் மோட்டார்ஸின் புதிய பங்குகள் 7.2% உயர்ந்தன.
ஃபோர்ட்டின் புதிய பங்குகள் 5.8% உயர்ந்தன.
ஆனால் இரண்டு பங்குகளும் இந்த ஆண்டில் இன்னும் சரிவில் உள்ளன.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ஏற்பட்ட வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய சரிவானது இதன்மூலம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான தனது வர்த்தகப் போரை நிறுத்தப் போவதில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
ஒட்டாவாவாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Link : https://namathulk.com