பாதுகாப்புத் துறையில் கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 455 பேரும், பொலிஸ் திணைக்களத்தில் இருந்து தப்பிச் சென்ற 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 63 கடற்படை உத்தியோகத்தர்களும் 81 விமானப்படை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com