அண்மையில் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்துக் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தைத் தாண்டிய நிலையில், பொலிசார் இவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
‘தூக்கமின்மை காரணமாக, அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவைவிட, அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்துக் கொண்டதால்தான் வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை’ என்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Link : https://namathulk.com