இரண்டு தென் கொரிய போர் விமானங்கள், பயிற்சியின் போது ஒரு பொதுமக்கள் பகுதியில் தற்செயலாக எட்டு குண்டுகளை வீசியுள்ளன.
இதில் எட்டுப்பேர்வரை காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் என்ற நகரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
கே. எப் 16 போர் விமானங்களால் வீசப்பட்ட எம். கே 82 குண்டுகள் துப்பாக்கிச் சூட்டு எல்லைக்கு வெளியே விழுந்து பொதுமக்கள் காயமடைந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து ஏன் நடந்தது என்பதை விசாரிக்கவும், பொதுமக்கள் சேதத்தின் அளவை ஆராயவும் ஒரு குழுவை அமைப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
கே. எப் 16 விமானங்களில் ஒன்றின் விமானி குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு தவறான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார். இரண்டாவது விமானமும் ஏன் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசியது என்பதைக் கண்டறிய மேலும் விசாரணை தேவை என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்திற்கு விமானப்படை மன்னிப்பு கோரியதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதாகவும், தேவையான பிற நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com