கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலைக் காரணமாக மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்தது.
இதனால் கொள்வனவாளர்கள் மாத்திரமின்றி விற்பனையாளர்களும் கவலையடைந்தனர்.
காரணம், விலை அதிகரிப்பால் விற்பனை குறைவடைந்தது.
இந்நிலையில் மரக்கறி வகைகளின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மிளகாய் பச்சை மிளகாய் போஞ்சி, தக்காளி ஆகியவற்றின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மொத்த விலைகளுடன் ஒப்பிடும்போது சில்லறை சந்தை விலைகள் சுமார் 30 வீதம் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 1100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை நேற்று முதல் 700 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோகிரன் போஞ்சி 300 ரூபாவாகவும், தக்காளி ஒரு கிலோகிராம் 180 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
இதன் அடிப்படையில் மரக்கறிகளின் சில்லறை விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Link: https://namathulk.com