முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹர நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி காணி அபகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய , குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com