‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படப் பூஜை – பிரம்மாண்ட அம்மன் சிலையுடன்  தொடங்கியது

Rajan
By
1 Min Read
மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் இரண்டாம் பாகத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.

குறித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இத் திரைப்படமானது, 100 கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ளது.

மார்ச் 15ஆம் திகதியில் இருந்து படப்பிடிப்பு பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இன்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடு செய்யப்பட்டதாகவும் இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *