ஈரானிய பாடகரும் இசைக் கலைஞருமான மெஹ்தி யாராஹிக்கு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்ததற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அகற்ற ஊக்குவிக்கும் பாடலான “ரூசரிட்டோ” எனும் பாடலைப் பாடியதற்காக யாராஹிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடலைப் பாடியதற்காகத் தண்டனையின் ஒரு பகுதியாக 74 முறைகள் யாராஹிக்கு சவுக்கடிகள் வழங்கப்பட்டதாகவும், இத் தண்டனையானது முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ஜாஹ்ரா மினோய் தெரிவித்தார்.
பாடகர் யாராஹி, ஆகஸ்ட் மாதம் 2023ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றத்தால் இவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனையும், 74 சவுக்கடிகளும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் தனது தண்டனையின் ஒரு வருடத்தை அனுபவித்ததோடு , மேலும் அவருக்கு சவுக்கால் அடிக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், இரண்டு ஈரானிய கவிஞர்கள் எதிர் பாலினத்தவர்களுடன் கைகுலுக்கியதற்காக தலா 99 கசையடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந் நிலையில் ஈரானில் ஹிஜாப் சட்டம் மற்றும் அது அமுல்படுத்தப்படும் கொடூரமான வழிகள் குறித்து அதற்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
Link : https://namathulk.com