இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா செய்தி சேவையில் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக காணப்படுகிறது.
மரபுசார்ந்த இலத்திரனியல் ஊடகங்களில் மாத்திரமன்றி சமூக ஊடகங்களில் இன்று வளம் வரும் நபராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார்.
அல் ஜசீரா நேர்காணலின் போது பட்டலந்த அறிக்கையை அவர் நிராகரித்ததை தொடர்ந்து இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை நேர்கண்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹாரிசன், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
பட்டலந்த வீட்டு வளாகத்தில் சட்டவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை முகாம் மற்றும் கொலைகள் இடம்பெற்றமை தொடர்பில் ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ரணில் விக்ரமசிங்க , நேர்காணலின் போது நிராகரித்தார்.
இவ்வாறன சம்பவம் நடக்கவில்லை என ரணில் கூற , அதுதொடர்பில் விசாரணை செய்யப்பட அறிக்கை காண்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத சட்டரீதியற்ற கோப்பு எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்துக்கள் தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்த விடயம் தற்போது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது
Link : https://namathulk.com