அமெரிக்காவில் வண்ணத்துப் பூச்சியினங்களின் எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்குள் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் குறைவடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 2000 முதல் 2020 வரை இந்த எண்ணிக்கை 22 வீதமாகக் குறைந்துள்ளது.
ஜூலியாவின் ஸ்கிப்பர் போன்ற சில வண்ணத்துப் பூச்சியினங்களின் இனங்கள் அழிவுப் பாதைக்குள் சிக்கியுள்ளன.
ஒரு காலத்தில் கொல்லைப்புற வண்ணத்துப் பூச்சியாக இருந்த வெஸ்ட் கோஸ்ட் லேடி எனும் இனம் 80 வீத அளவில் குறைந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட 107 இனங்களில் 50% ற்கும் அதிகமாகக் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“இது ஆபத்தானது, ஏனெனில் இது பொதுவான வண்ணத்துப் பூச்சிகள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதைக் குறிக்கிறது” என்று பேராசிரியர் கிராமஸ் தெரிவித்தார்.
வாழ்விட இழப்பு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இந்த பூச்சிவகையின் இழப்பிற்கு முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வண்ணத்துப் பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், சூழலின் சமநிலையைப் பேணுவதற்கும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.
அவற்றின் அழிவு உணவு உற்பத்தி மற்றும் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் சீர்குலைக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கும்.
இவற்றைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Link : https://namathulk.com