நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் திண்டாடி நிற்கின்றனர்.
அதிலும் அதிகளவான பெண்கள் திறமை இருந்தும், அதனை சமூகமயப்படுத்த தெரியாது வாழ்கின்றனர்.
இந்நிலையில் எமது அயல் நாடான இந்தியாவை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பெரியதாக காணப்படுகிறது.
அதிலும் அரச சேவையில் சவால் நிறைந்த பல பதவிகளில் பெண்கள் கோலோச்சி நிற்கின்றனர்.
எனினும் இலங்கையில் சில தொழில் துறைக்கு மட்டுபடுத்தப்பட்ட ஆளணியினரே சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக ரயில்வே , போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் .
இந்த விடயங்கள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சில கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய பொது போக்குவரத்து, ரயில்வே துறைகளில் சாரதிகள், ரயில் ஓட்டுனர்கள், காவலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பெண்களை நியமிப்பது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com